இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நம் நாட்டில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கைநிலைபற்றியும் அந்நிலையிலிருந்து மேன்மையடைவும் பெண் அறிஞர்கள் பலர் அவ்வப்போது நூல்களிலும் இதழ்களிலும் கட்டுரைகள் வடித்துள்ளனர். பெண் இனத்தார்க்கு உரிய விடுதலை வேண்டித் தன் எழுத்தாற்றலால் ஒல்லும் வகையால் அயராது தொண்டாற்றிவரும் பேராசிரியை முனைவர் இரா. பிரேமா அவர்கள் அக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு கட்டுரைத்தொகுப்பாக வெளயிட்டுள்ளார்.