கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாம் வாழுகின்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தப்புத்தகத்தை எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது. மதுரையில் சொக்கிகுளம் பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று அதில் இருந்த பெரிய, பெரிய பங்களாக்கள், தரைமட்டமாக்கப்பட்டு, அடுக்குக் கட்டிடங்கள் தோன்றியதைப் பார்த்த பொழுது, அதை அடிப்படையாக வைத்து ஒரு புத்தகம் கதை வடிவில் எழுதத் தோன்றியது.