சூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப் படிமங்களாய் நிறைந்துகிடக்கின்றன. போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும் கேட்ட நிகழ்வுகளையும் பத்திரிகைகளின் பக்கங்களைத் துணைக்கொண்டு எழுத நேர்ந்தவற்றுள் சிலவற்றைத் தொகுத்துச் சிறப்பான படங்களோடு தரும் எனது இளவல் அருணனின் உழைப்பில் உருவான இதனைத் தமிழுலகிற்குப் பணிவோடு முன்வைக்கின்றேன். வழக்கமான பயணங்களைப் பதிவு செய்யும் பயண இலக்கியத்திற்குச் சற்றே மாறுபட்டுப் புதிய கோணத்தில் வரலாற்றைப் படிக்கவும் , பார்க்கவும், படைக்கவும் துணை செய்கின்ற , தொடர்ந்து இயங்கிப்போகிற வல்லுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் உதவும் என்பது நம்பிக்கை.