உலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம்.
வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம் உலக அறிஞர்கள் வாழ்க்கையில் உற்ற, உணர்ந்த உன்னத தத்துவங்களை பொன்மொழிகளாக நமக்கு பொறிந்து வைத்துச் சென்றுள்ளனர்.
அந்த அரிய பொன்மொழிகளை ' பாவை பொன்மொழிகள் ' எனும் தலைப்பில் தொகுத்தளித்த திரு. பொன் ராஜன்பாபு அவர்களை வாழ்த்துகிறோம்.
வாழ்க்கையில் நம்பிக்கையற்று, சோர்ந்து, மதில்மேல் பூனையாக இருக்கும் இளைஞர்களுக்கு இந்நூல் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தெளிவையும் கொடுக்கும் என நம்புகிறோம்.
கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அழகாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வுறுகிறோம்.