உணர்வுள்ள எந்த குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம்.
மக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்தப் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது அவசியம். அந்த வகையில் ஞாநியின் 'ஓ! பக்கங்கள்' கூர்மையான விமர்சனங்கள், நேர்மையான பார்வைகள்.
அதனால்தான் சமூகம், பண்பாடு, அரசியல் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்களுடன் உடன்படாத வாசகர்கள்கூட, ஒரு விஷயத்தில் ஞாநியின் கருத்துத என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். சமூக அக்கறைக்குரிய எந்த விஷயத்தைப்பற்றியும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்ற அவர் கருத்தை நிச்சயம் எல்லாருமே ஏற்றுக்கொள்கின்றனர். அப்படிப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
- பதிப்பகத்தார்