
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Nenjai thotta nilal manushigal
Free shipping over ₹500
தற்போது, சக்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் சினிமாவில் கூட பெரும்பாலும் கிளர்ச்சியூட்டும் வகையிலேயே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இயல்பாகவும் நுட்பமாகவும் படைக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை சர்வதேசத் திரைப்பட விழாக்களில்தான் காண முடியும்.
உலகின் முக்கிய தேசங்களிலிருந்து பங்கு கொண்ட திரைப்படங்களில் விதவிதமான பெண் பாத்திரங்களைப் பார்த்து, பிரமித்தபடி வந்த எழுத்தாளர்கள் சுரேஷ்&பாலா, அந்த நிழல் மனுஷிகளை 'அவள் விகடன்' இதழின் தொடர் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு பெண்களிடம் இருந்து மட்டுமல்ல; ஆண்களிடம் இருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. காரணம், திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்றே அனுபவத்தை உண்டாக்கும் எழுத்து நடை.
கல்விக்காக ஏங்கும் ஹயாத், பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட எண்ணி மருத்துவச்சியாகி தண்டனை பெறும் வேரா, மதத்தின் வழி அநியாயம் செய்யும் தந்தையை தண்டிக்கும் மிகாலி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கணவனை கொலை செய்த ஏஞ்சலீனா. காதலனால் கைவிடப்பட்டு வாழ்வு தேடும் ரீட்டாவும் பொம்மேயும், பணயக் கைதியாக கடத்தப்பட்டதாலேயே களங்கப்பட்டவளாக சமூகம் நிராகரிக்கும் யூகோ, புரட்சிக்காரியாகி போராடும் வோல்கா, புகழ் தேடி ஏமாறும் காத்ஜா, போரினால் பாதிக்கப்படும் கிலானி,மேகோல்...
_ இப்படி பல்வேறு சூழலில் அசாதாரண தருணங்களைச் சந்திக்கும் நிழல் மனுஷிகளின் காதல், கவலை, கோபம் போன்ற உணர்ச்சிகள் நம் நெஞ்சைத் தொடுகிறது. இந்தப் புத்தகத்தில் உள்ளவர்கள் நிழல் மனுஷிகள் மட்டுமல்லர்; வெவ்வேறு நாடுகளில் விரவிக் கிடக்கும் நிஜ மனுஷிகளும்கூட. மேலும், இவர்களது கதையை மட்டுமின்றி கலாசாரம், வாழ்க்கை முறை போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
பக்கங்களைப் புரட்டுங்கள்... புதியதோர் அனுபவத்தைப் பெறுங்கள்!
Topics / குறியீடுகள்