இளைய தலைமுறையினரிடையே புதிய சிந்தனைகள் சென்று சேரவேண்டும், அவர் களுடைய வளர்ச்சிக்கு முடிந்தவாறெல்லாம் நம் முடைய பங்கினைச் செலுத்த வேண்டும் என்பதே விஜயா பதிப்பகத்தின் குறிக்கோள்.
பயனுள்ள நூல்களை வெளியிடும் பணியை நாங்கள் ஆண்டாண்டு காலமாய் செய்து வருவது நீங்கள் அறிந்ததுதான். எங்கள் முன்னேற்ற நூல் வரிசையில் இந்நூல் குறிப்பிடத் தக்கதாய் அமைந் திருக்கிறது. இதன் சிறப்பு எந்தத்துறையைச் சேர்ந்தவருக்கும் பொருந்தும்படி அமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான்.