கோவையில், 'களம்' இலக்கிய அமைப்பு சார்பில், 'கொங்கு நாட்டு நாவல்கள்' என்ற தலைப்பில், இலக்கிய கருத்தரங்கு நடக்கிறது.இன்று காலை, 10:00 மணிக்கு, மரக்கடை நரசிம்மலு நாயுடு பள்ளி அரங்கில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, பாரதியார் பல்கலை முன்னாள் தமிழ் பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகிக்கிறார்.எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் எழுதிய, 'ஓடைப்புல்' நாவல் குறித்து கவிஞர் நித்திலன், மா.நடராஜன் எழுதிய, 'ஊர் கலைஞ்சு போச்சு' நாவல் குறித்து சி.ஆர்.ரவீந்திரன், சுப்ரபாரதிமணியனின், 'புற்றுமண்' நாவல் குறித்து நடராஜன், முருகவேளின் 'மிளிர்கல்' நாவல் குறித்து கவிஞர் அறிவன் மற்றும் முனைவர் ஆறுமுகம் கருத்துரை வழங்க
உள்ளனர்.எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.