நாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனித மனம் அமைதி கொள்ளாது, புதிய புதிய தகவல்களுக்காக பொழுதுகள் தோறும் அலைந்துகொண்டே இருக்கிறது.