இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப் போன குரூரங்களின் முன் ஓரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. முதல் தொகுப்புக்கும் இந்தத் தொகுப்புக்குமிடையேயான ஆறாண்டுக் கால இடை வெளியில் கவிதையமைப்பில், செய்நேர்த்தியில், கவிதை மொழியில், பார்வையில் இசையிடம் கூடிவந்திருக்கும் கலைத்திறன் வியப்பளிக்கிறது.