மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும். மருத்துவரிடம் செல்லும் ஒரு நோயாளியின் பல்ஸ் பார்த்து, மார்பிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப் அழுத்திப் பார்த்து, தொண்டையிலும் கண்களிலும் டார்ச் அடித்துப் பார்த்து, நோயின் தன்மையை ஒருவாறு கண்டறிந்து பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தருவது நடைமுறை. தேவையெனில் ரத்தப்பரிசோதனை, எக்ஸ்_ரே, ஈ.சி.ஜி., சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இத்தியாதிகள்! இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மேலே சொன்னவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை விளக்கும் நூல் இது. அரிப்பு, ஆஸ்துமா, இதய வலி என்று எந்தவித பாதிப்புடனும் நோயாளிகள் வந்தாலும், அவர்களுடன் பொறுமையாகப் பேசி, கேள்விகள் கேட்டு, அவர்களது ஆழ்மனது உணர்வுகளை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து கொடுத்து குணப்படுத்தும் முறைகளை விளக்குகிறார் நூலாசிரியர். முக்கியமாக, எந்தவொரு மனிதனுக்கும் தாவரம், தாது, மிருகம் இவற்றில் ஏதாவது ஓர் இனத்தின் தாக்கம் இருக்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதின் அடிப்படையில்...