இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்து பயன்படுத்தும் பல்வேறு வழிமுறைகளையும், விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு.
இன்டர்நெட் என்றால் என்ன? இன்டர்நெட்டும் வெப்சைட்டுகளும், பர்சனல் கம்ப்யூட்டரும் நெட்வொர்க்கும், இணைய தொழில்நுட்ப விவரங்கள், இன்டர்நெட் இணைப்பைப் பெறுவது, தமிழில் இன்டர்நெட்டை கையாளும் முறை, இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவது... இப்படி பல்வேறு தலைப்புகளில் இன்டர்நெட் பற்றிய A to Z தகவல்களை எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி.
மக்களிடம் இன்டர்நெட் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தவும், தொழில்நுட்ப ரீதியில் பொருள் சேர்க்க முனைவோர்க்கும், இன்டர்நெட் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்களக்கும் இந்த நூல் அரிய பொக்கிஷமாக விளங்கும்.
-ஆசிரியர்