நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் என்ற இந்த புத்தகம், புதிய குறிக்கோள்களை அமைக்கவும். வாழ்க்கைக்கான நோக்கத்தை தெரிந்து கொள்ளவும், உங்களை பற்றியும் உங்களது வருங்காலத்தை பற்றியும் புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.
மேலோட்டமாக படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரே நாளில் படித்து முடிப்பதன் மூலமாகவோ இதன் மையக்கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாது. ஒரு நேரத்தில் ஒரு அத்தியாயம் என்ற நிலையில், இப்புத்தகத்தில் அமைந்துள்ள அத்தியாயங்களை மெதுவாக கவனமாக படிக்க வேண்டும். ஒரு அத்தியாயத்தை படிக்கும்போது அதில் உள்ள அம்சங்களை சரியாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளாமல் அடுத்த அத்தியாயத்திற்கு செல்லக்கூடாது.