சொத்து என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைகக்கு ஆதாரமாக இருப்பதாகும். சொத்து இரண்டு வகைப்படும் 1. அசையும் சொத்து. 2 அசையா சொத்து பணம், பண்டம், பொருள் போன்றவை அசையும் சொத்துக்களாகும். நிலம், கட்டிடம், போன்றவை அசையாச் சொத்துக்களாகும். சொத்து வாங்குவது விற்பது பற்றி சட்டம் எவ்வளவு தெளிவாக இருந்திட்டபோதிலும், மோசடி பேர்வழிகள் எப்படியோ அடுத்தவர்களை ஏமாற்றி அவர்களது சொத்துக்களைப் பறித்து கொள்கிறார்கள். இந்நூல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.