உயில் என்பது ஒருவர் தான் தேடி வைத்தள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து மற்றொரு நபருக்கு அந்தச் சொத்துக்கள் சென்றடையும் வகையில் எழுதும் ஒர் ஆவணமாகும். உயில் ஒன்றை வயதான காலத்தில் தான் எழுத வண்டும் என்பதில்லை. பதினெட்டு வயதுக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் உயில் எழுதலாம். எழுதப்பட்ட உயிலைத் தமது வாழ்நாள் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். உயில் எழுதும் போது, உயில் எழுதிவைப்பவர் நல்ல மனநிலையில் இருத்தல் வேண்டும். உயில்கள் என்னும் இந்த நூல் உயில்கள் என்றால் என்ன என்பதற்கான பொருள் விளக்கங்களைக் கொண்டிருப்பதுடன், உயில் சம்பந்தமான வழக்குத்தீர்வுகளையும், மாதிரிபடிவங்களையும் கொண்டிருக்கின்றது.