பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய ' வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை 'வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), 'விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன’ என்று நமக்கு இயற்கை உணர்த்தும்.