குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற் கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சேகரிக்க வேண்டும். ரோமங்கள் மற்றும் நூலிழைகளிலிருந்து கூட ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும். சலவைக் குறியிலிருந்து ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்து விடலாம்.