பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் - ரன்பிர் கபூர் காதலிப்பது வரும் நிலையில் இது பற்றி அவரது தந்தை மகேஷ் பட்டிடம் கேட்டகப்பட்டது. அதற்கு அவர்,"அது அவர்களது சொந்த விஷயம் அவர்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்றும் மேலும் அதை வெளியில் சொல்வதும் மறைப்பதும் அவர்களைப் பொறுத்தது" என்றார்.
ரன்பிர் நல்ல மனிதர் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் ஆலியா தெரிவித்துள்ளார். நடிகை கத்ரினா கைஃபை பிரிந்த ரன்பிர் தற்போது ஆலியாவை காதலிக்கிறார். இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்று தான் பாலிவுட்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.