இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்...ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்...ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...!