நம் நாட்டில் ஆறில் ஒருவருக்கு சர்க்கரை நோய் அறிகுறி இருக்கிறது. பல குடும்பங்களில் இது பரம்பரைச் சொத்தாக மாறி வருகிறது.
இப்போது சிரிப்பு இனிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது இனிப்பான செய்தி தான்.
ஜப்பானில் சர்க்கரைநோய் அறிகுறி உள்ள 30 பேரைக் கூப்பிட்டார்கள். நல்ல சாப்பாடு. அது முடிந்த கையோடு கடும் அறுவையான ஓர் | உரையைக் கேட்க வைத்தார்கள். உரை முடிந்ததும் அவர்களுடைய இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறியதாம்.
சில நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் கூப்பிட்டார்கள். அதே போல நல்ல சாப்பாடு. பின்னால் வயிறு குலுங்கச் சிரிக்கக் கூடிய ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை அவர்கள் பார்த்தார்கள். உங்கள் யூகம் சரிதான். இப்போது அவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்தது. எனவே சிரியுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர் களையும் சிரிக்கச் சொல்லுங்கள். நீங்கள் சிரித்து மகிழ்வதற்காகத்தான் பல ஜோக்குகள் இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளன.