ஜாதகம் பார்ப்பது எப்படி? - இப்பூவுலகில் மானிட வாழ்க்கை செம்மையாயும். நெறியுடனும், அமைதியுடனும், மகிழ்வுடனும் அமைய வேண்டியும் - இறை பக்தியையும் செல்வ வளங்களையும் குறைவின்றி பெற்று அறம், பொருள், இன்பம் குன்றாது வாழ வேண்டியும் இப்பிறப்பில் நற்கடனாற்றி மறுபிறப்பில் வீடுபேறு பெறவும் இறையனாரின் அருள்பெற்ற மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள், மகான்கள் போன்ற பலரும் தத்தமது தவவலிமையாலும், மனோபலத்தாலும், இறையருளாலும் பல்வேறு சாதனங்களையும், பல்வேறு உபாயங்களையும், பல்வேறு சித்துக்களையும் கண்டறிந்தார்கள். இதன் விளைவாக பல கதைகளும், சாஸ்திரங்களும், தத்துவங்களும், பிரதானமான வேதங்களும் தோற்று விக்கப்பட்டன. மக்கள் வாழ்வுக்கு நல்லநெறியும், கடமையுணர்வும் அமையவேண்டி இறைவனே ஏற்படுத்தித் தந்த கலைகளும் உண்டு. பகவத் கீதை இதில் அடங்குவதே!