சித்தர்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தவர் போகர். போக மாமுனிவரின் பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். சோதிடம் மருத்துவம், மாந்த்ரீகம் ஆகியவற்றில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை வகுத்துக் கொண்டு அவற்றூ ஆராய்ந்தவர். இவர் தாம் கண்டறிந்த முடிவுகளைப் பாடல்களாகப் பாடியுள்ளார். அவற்றுள் சோதிடத்தைப் பற்றிப் பாடியவை ஏராளம். இவரது பாடல்களில் சோதிடப் பலன்கள். உறுதியாகக் கூறப்பட்டிருக்கும். மற்ற சோதிட வல்லுநர்கள் கூறிய பலன்களைவிட இவரது சோதிட கிரகப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளன.