
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v1.0.37

Opening the world of stories

Navagiragangalum Avattrirkuriya Dhosha Parikaarangalum
Free shipping over ₹500
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும்
சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப்
பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால்
ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து,
சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில்
திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை
அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர
காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில்
செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால்
அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய்
காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம்
நிவர்த்தி ஆகும்.
புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில்,
புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து,
புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை
வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும்
பெறுவார்கள்.