நமக்குப் பல முகங்கள் பூக்களுக்கு ஒரே முகம் அது சிரிப்பு முகம். அது தன் சிரிப்பை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்வது இல்லை குழந்தை மகான் குலமகள் விலைமகள் ஏழை பணக்காரன் திருடன் கொலைகாரன் ஊர்வன பறப்பன என்று பாகுபாடின்றிச் சிரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சிரிப்பு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களின் திறப்பு.