book

சமையல் சுல்தான்

Samaiyal Sultan

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. சுல்தான் மொய்தீன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934755
Add to Cart

"சுல்தானின் சமையல் ரெசிபிகளை விடவும் சுவையான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? அவற்றுக்குப் பின்னால் உள்ள கதைகள். கலைஞர், ரஜினி காந்த், டோனி பிளேர், பில் கிளிண்டன், சதாம் உசேன் என்று சுல்தானை வியந்து ரசித்த பிரபலங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்றது மட்டுமல்ல அவர் சாதனை. உலக நாடுகளை வரிசை வரிசையாக இந்தியாவுக்கு அழைத்து வந்ததில் அடங்கியிருக்கிறது அவர் மகத்துவம். சமையலை ஒரு கலையாகவும் உலக அற்புதங்களின் கலவையாகவும் காண முடியும் என்பதை மெய்ப்பிக்க இந்நூல் ஒன்று போதும். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால ருசித் தேடலின் விளைவு இது. ஆனந்த விகடனில் வெளிவந்த வெற்றிகரமான இத்தொடர், முதல் முறையாக இப்போது நூல் வடிவில். உலகப் புகழ்பெற்ற, ஓபராய், மெரீடியன், ஷெரடன் போன்ற நட்சத்திர ஹோட்டல்களில் செஃபாக பணிபுரிந்தவர் கு. சுல்தான்மொய்தீன். உலக மற்றும் இந்திய ஊடகங்களில் புகழ்பெற்றவர். அமெரிக்காவில் இருந்து வெளியான புகழ்பெற்ற உலக சமையல்கலை நிபுணர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழர். தற்போது சரித்திரக்கால சமையல் முறைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்."