book

காலம்

Kaalam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண்ணநிலவன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780326
குறிச்சொற்கள் :வழக்கு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், காதல்
Add to Cart

இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். மனித வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கைச் சக்கரத்தோடு பிணைந்திருக்கிறது. சந்தோஷம் தரும் தருணங்கள் மனிதனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. துக்கம் தரும் சமயங்களில் மனம் ஆறுதலையும் உறவுகளையும் நாடிச் செல்லும். அப்போது கிடைக்கும் ஊக்கமே மனிதனை தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் வாழ்க்கை மீதான பிடிப்பை உறுதியடையச் செய்கிறது.
அப்படியான சூழலை 'காலம்' எனும் இந்நாவல் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் சராசரி இளைஞன், அவனது மனதில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய மனச் சித்திரம், இயற்கையான உணர்வுகளால் ஏற்படும் தடுமாற்றம், ஆறுதல் தரும் சிநேகம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மீதான மதிப்பீடு, கோர்ட் குமாஸ்தா வேலையில் அடையும் மனநிறைவு என வேறொரு உலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வண்ணநிலவன்.

இந்நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்தான். ஆனால், அவர்களின் மறுபக்கத்தை வியக்கவைக்கும் வகையில் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார். மாறிவரும் சமூகச் சூழலில், காதல் என்பதின் இன்னொரு பக்கத்தையும், உறவுகள் மீதான நம்பிக்கையையும் அபாரமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.

மனிதத் தேடலில் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், மனித உறவுகளின் அவசியத்தை வலியுறுத்தும் இந்தச் சமூக நாவலை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.