பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
Micham Methi
₹525
எழுத்தாளர் :பழ. அதியமான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :479
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969120
Add to Cart"டாக்டர் வரதராஜுலு நாயுடு - 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழக அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதி. காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் AND description='; ஆனால், 5 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் AND description='; எனினும், பெரியாரின் மரியாதைக்குரிய நண்பர். ராஜாஜியின் செயல் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர் AND description='; ஆனால், ""சொந்த வாழ்க்கையில் பரிசுத்தமாயிருந்தவர்களில் ஒரு சிலரைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவர்களில் மூன்று பெயர்களை மட்டும் கூறுவதாயின் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார் என்று சொல்வேன்' (பக்.383) என்று ராஜாஜியைப் புகழ்ந்தவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து சில காலம் நடத்திய நாயுடு கூறிய ""முழுச் சுதந்திரம் - ஆம் தவறு செய்யக்கூட சுதந்திரம் வேண்டும்' (பக். 128) என்ற வாசகங்கள் இன்றைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கான விருது வாசகங்களாக விளங்குகின்றன.
இதுபோன்ற கணக்கற்ற தகவல்களைத் தருகிற இந்தப் புத்தகம், வெறும் தனிநபர் வரலாறல்ல. ஓர் ஆளுமை பற்றிய ஆவணம். இத்தகைய அரசியல் ஆளுமைகள் தமிழக சூழலில் மிக அபூர்வமானவை. புத்தக ஆசிரியர் பழ. அதியமானின் உழைப்பு பக்கத்துக்குப் பக்கம் தெரிகிறது.
தமிழகத்தின் ஒரு காலத்திய அரசியல் - சமூக வரலாறாகவும் AND description='; காங்கிரஸின் உள்கட்சிப் போராட்ட வரலாறாகவும் AND description='; அக்காலத்தில் நிலவிய சாதியத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் தன்மை குறித்த பதிவாகவும் இந்தப் புத்தகம் வந்துள்ளது. தமிழகத்தின் அரசியலைத் தாண்டியும் இந்தப் புத்தகம் செல்கிறது.
புத்தக ஆசிரியரின் தனிப்பட்ட சார்புகள் தொனிக்கும் இடங்களை எடிட் செய்திருக்கலாம். என்றாலும், இது போன்ற சிறிய குறைகளால் புத்தகத்தின் முழுமையும் முக்கியத்துவமும் பாதிக்கப்படவில்லை என்பதே உண்மை"