தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)
Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru)
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலூர் கண்ணப்ப முதலியார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :440
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதமிழ் நூல் வரலாறு என்னும் இந்த நூல் தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதப் பெற்று 1962ஆம் ஆண்டில் வெளிவந்த முதற் பதிப்பின் - மறு பதிப்பாக எங்களால் வெளியிடப்படுகிறது. இந்நூலில் ஆசிரியர் அவர்கள் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல முற்கால, இடைக் கால, தற்காலத் தமிழ் நூல்களைப் பற்றியும் நூல் ஆசிரியர் களைப் பற்றியும் இந்நூலாசிரியர் காலத்தே வாழ்ந்து கொண்டிருக்கும் புலவர்களைப் பற்றியும் சுவைபடக் கூறுவதாக உள்ளது. பழங்காலத் தமிழ் இலக்கியம் தொட்டு இன்றைய சிறந்த நூல்கள் குறித்தும் -அகத்தியர் தொடங்கி - பாலூர் கண்ணப்ப முதலியார் வரை ஆசிரியர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்தும் தொகுக்கப் பெற்றுள்ள சிறந்த நூல் வரலாறாக மட்டுமின்றி சங்ககாலம் தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரையுள்ள இலக்கிய வரலாற்று நூலாகவும் விளங்குகிறது. தமிழ்நூல்கள் வெளியீடு பற்றிய விபரங்கள், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை உள்ள வரலாறு எதுவும் தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நூலை மறுபதிப்பாக வெளியிடுவதன் மூலம் இதை ஆதார நூலாக வைத்து இதன் நிறைவிலிருந்து 1960 முதல் இன்று வரையுள்ள தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி ஆராய்ந்து தொகுத்து வெளியிடு வார்களானால் அதுவே இந்த நூலை மறுபதிப்பாக நாங்கள் வெளியிட்டதற்கான பயனாக அமையும்.