கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
Kannan Aruliya Bhagawat Geethai
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :6
Published on :2012
ISBN :9788184026139
Add to Cartஇது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலில் நாம் ஆச்சாரியார்கள் மற்றும் மகான்கள் சொன்ன தெளிவுரைகள் சிலவற்றைப் பார்த்தோம். அந்த வரிசையில் நாம் இப்போது கவிஞர்கள், அறிஞர்கள், அறிவுசார் வித்தகர்கள் சொல்லும் சில எளியவுரைகள் பார்ப்போம். அதன் பிறகு நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் எளிய உரையினைத் தொடர்வோம்.