book

சாகாவரம்

Saagaavaram

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :230
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788123416470
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், புதினம்
Add to Cart

சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக்  கற்பனைப் பாட்டையில் சென்றுகொண்டே இருக்கும். அப்படித்தான் இப்புதினத்தின் கதைத் தலைவனும் தன்னுடைய இளம் வயதில் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். தனக்கு நெருங்கியவர்கள் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்ததும், அவருடைய அமைதி குலைக்கிறது. அவர் பார்க்கின்ற ஒவ்வொன்றும்  அவருக்கு முரணாகப் புலப்படுகிறது. எது  வாழ்வு, எது சாவு, எது நிலையானது,  எது மறையக்கூடியது என்று ஆழ்ந்து சிந்திக்கத் துவங்குகிறார். வயது இளமையில் இருக்கும் போதே, மனம் முதிர்ந்து முதுமையடைகிறது. தன்னுடைய பரபரப்பான  வாழ்க்கையை ஒதுக்கித்தள்ளிவிட்டு , கொல்லிமலைக்குப் பயனிக்கிறார், கதைத்தலைவன். அங்கே அவருக்குப் பலவித  அனுபவங்கள் அவற்றையொட்டிய ஆழ்ந்த சிந்தனைகள் தொடர்கின்றன, தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவரது இளமைதொட்டு இறுதிப் பயணம்வரையில் அவருடைய உணர்வுப் பொங்குதலை  அணுஅணுவாக விவரிக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு.

                                                                                                                                             - பதிப்பகத்தார்.