book

அதிகாலையின் அமைதியில்

Athikaalayin amaithiyil

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416441
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

அதிகாலையின் அமைதியில்; இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் மீது நாசிச ஜெர்மனி செய்த நேரடிச் சண்டையில் தோல்வியடைந்த பிறகும், ஜெர்மனி தனது வஞ்சகத்தை மாற்றிக்கொள்ள வில்லை. 1942 -ஆம் ஆண்டில் ஜெர்மானியர்கள் ரஷ்யாவின் கிழக்கேயுள்ள கால்வாயையும் மூர்மன்ஸ்க் சாலையையும் 24 மணிநேமும் இடைவிடாதுகுண்டுகளால் தாக்கிய  வண்ணம் இருந்தார். அதைச் சார்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே அதிகாலையின் அமைதியில் என்னும் இந்தப் புதினம்.  கதைத்தலைவன் துனைப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதி வஸ்கோவ் ரஷ்ய எல்லையில் முகாமிட்டிருக்கிறார். அவருடன் சக பெண் வீரர்களும் உடன் இருக்கின்றனர். ரஷ்யாவில் அழிவு வேலையைச் செய்வதற்காக , சக்தி வாய்ந்த வெடி குண்டுகளுடன் ஜெர்மானியர்கள் காட்டு வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவுகின்றனர். அப்போது , அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்டறிந்து தாக்கும்போது , பெண் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. அனைத்துச் சோகங்களையும் மீறி தளபதி வஸ்கோவ் ஜெர்மானிய ஊடுருவாளர்களை வீழ்த்துகிறார். கதைத் தலைவன் வஸ்கோவ் மற்றும் பெண் பனை வீரர்களின் சொந்த வாழ்வில் ஏராளமான துயரங்கள் ! அவற்றையெல்லாம் தாண்டி 'எதிரியை வீழ்த்துவோம்.  இல்லையேல் தேசத்துக்காக வீழ்வோம் ' என்ற வெறியுடன் போராடும் இளம் உள்ளங்களின் உணர்வினையும் போரில் அவர்கள் செயல்படுத்தும் வீரச்செயல்களையும் கண் முன்னே சித்திரிக்கிறார் நூலாசிரியர்  பரீஸ்வஸீலியெவ்.


                                                                                                                                                  - பதிப்பகத்தார்.