book

சின்ன ஐடியா பெரிய லாபம்

Chinna idea periya laabham

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கட்டுரையாளர்கள்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :155
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788189780104
குறிச்சொற்கள் :தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், பணம்
Out of Stock
Add to Alert List

தொழிற்சாலைகள் தொடங்குவது, புதிய வியாபாரம் ஆரம்பிப்பது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது என்று பிஸினஸின் பல விஷயங்களில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வம்காட்டி வருகிறார்கள்.
'பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவா..?' என்பதைச் சொல்லும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, 'அவள் விகடன்' இதழில் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றது.

எந்த ஒரு வெற்றிகரமான பிஸினஸும் சின்ன ஐடியாவில்தான் ஆரம்பமாகிறது. அதற்கு, நம் திறமை என்ன என்பதையும் அதை புத்திசாலித்தனமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்துகொண்டால் போதும்.

பங்குச் சந்தையில் சக்கைப்போடு போடும் இல்லத்தரசியில் ஆரம்பித்து, நர்சரி கார்டனில் நல்ல லாபம் பார்க்கும் இளம் பெண்கள் வரை பலரும் தங்களது புத்திசாலித்தனமான முயற்சியால், ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிற தொழில் வாய்ப்புகளைப் பற்றி இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஊறுகாய் தயாரிப்பு முதல் பரஸ்பர நிதி முதலீடு வரை எத்தனையோ சிறந்த ஐடியாக்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. இந்தச் சின்ன ஐடியாவுக்குத் தேவைப்படும் முதலீட்டின் அளவும் மிகக் குறைவானதே. இது மட்டுமா? எந்த முதலீடும் இல்லாமல் அன்பான, கனிவான அணுகுமுறை மட்டுமே மூலதனமாக்குவது போன்ற வியக்க வைக்கும் ஐடியாக்களும் உள்ளன!

தொழில் தொடங்குங்கள்... சொந்தக் காலில் நில்லுங்கள்! பணத்துக்கான பாதைகள் பல உண்டு. உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். அந்தப் பக்குவத்தை ஒவ்வொரு இல்லத்தரசிகளும் அடைய மிகச் சிறந்த வழிக்காட்டியே இந்த 'சின்ன ஐடியா... பெரிய லாபம்!'