எண்ணங்கள் ஓய்வதில்லை
Ennangal Ooivathillai
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயரதி அகஸ்டின்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422053
Add to Cartஉன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய வேண்டி யதன் அவசியத்தை எடுத்தியம்புவதுதான் ஜெயரதி அகஸ்டின் எழுதியுள்ள இந்த “எண்ணங்கள் ஓய்வதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு.
“தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றைத் தான் ‘சக்கரம் சுழலும்’ என்ற கதையில் சுந்தரின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். தன் பிள்ளை முட்டிப் போட்டுத் தவழும் நிலையில் கூட அவன் கால்கள் நோகக் கூடாது என்று எண்ணு பவர்கள்தான் பெற்றோர். அத்தகைய நல்ல உள்ளங்கள் முடியாத வயதில் சக்கர நாற்காலியில் வலம் வந்தால் தன்னுடைய பளிங்குத் தரை வீணாகி விடும் என்ற மனைவி சொல்லையே தெய்வ வாக்கு என எண்ணி பெற்றவர்களை உதாசீனப்படுத்திய சுந்தருக்குக் காலம் தந்த தீர்ப்பு உண்மையிலேயே உகந்தது.