book

லாரி டிரைவரின் கதை

Lorry driverin Kathai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123414315
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

லாரி டிரைவரின் கதை ;  இநுநூலில் வரும் பாத்திரப் படைப்பான இலியாஸ் திறமை மிக்க லாரி டிரைவர். கடுமையான கணவாய்களிலும், மலைப்பாதைகளிலும் லாரியை ஓட்டும் துணிவும் சிறந்த ஆற்றலும் படைத்தவன். கடமையில் கரும் வீரனான இலியாஸ் காதல் வாழ்விலும் வெற்றி கண்டவனாகத் திகழுகிறான். ஆனால், அந்த வெற்றியை  வாழ்நாள் முழுவதும் அவனால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகிறது. இலியாஸ் அடைந்த அந்த இன்ப வாழ்வை, கதீஜா என்ற வேறொரு பெண்ணின் உறவால் தடம்புரண்டு அவனே அழித்துக்கொள்கிறான்.அதனால் ஏற்படும் தவிப்பையும் ஏக்கத்தையும் இந்நூலாசிரியர் இதிலே சித்திரித்திருப்பது தீய உள்ளங்களை தூய்மையாக்கும் படிப்பினையைப் போதிக்கிறது. மெய்காதலுக்கு இலக்கணமாய் அமைந்தவள் ஏசெல் உற்றார் உறவினர்களின் விரோதங்களையும் சம்பாதித்து, சமூக கட்டுப்பாடுகளையும் மீறி இலியாஸைக் காதலனாகக் கைப்பிடிக்கிறாள் ; காதல் கனிந்து பயனும் அளித்தது; மகப்பேறும் பெறுகிறாள். முடிவில், வாழ்வில் ஏமாற்றமும் பரிதவிப்பும் , அபலை என்றதுர்பாக்கிய நிலையும் அவளுக்கு ஏற்படுகிறது. பின்னர் சாலைப் பராமரிப்பு அதிகாரி பெய்ட்மீர்  என்ற உயர்ந்த நல்லெண்ணம் படைத்தவரின் நட்பு ஏசெலுக்குக் கிடைக்கிறது. அவள் வாழ்வில் ஒளி விளக்காக பெய்ட்மீர் துணை நின்றபோதிலும்  கடைசிவரை ஏசெல் , களங்கமற்ற நட்புடனே அவரிடம் நடந்து கொள்கிறாள்.

                                                                                                                                           - பதிப்பகத்தார்