book

வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை

Venisulelavin Puratchipaathai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.நா. தர்மராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9798123412398
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

வெனிசுவேலாவின் புரட்சிப்பாதை ;லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு புதிய எழுச்சி எற்ப்பட்டுள்ளது. அது
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சியாகும்.இந்த எழுச்சியின் ஈட்டி முனையாக வெனிசுவேலா
திகழ்கிறதென்றால் அதன் கூர்முனையாக அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஹுகோ சாவேல் விளங்குகிறார்.ஆனால்
இதற்கு ஒரு பின்னணி உண்டு. கடந்த 20 நூற்றாண்டில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனி
ஆதிக்கத்திலிருந்து சுதந்திர மடைந்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் நலன்களுக்கு உதவுவதாக உறவு கொண்டாடி
அந்நாடுகளில் காலடி எடுத்து வைத்த அமெரிக்கா. தனது வஞ்சகத்தனமான நவீன காலனி ஆதிக்கத்திற்கான தளம்
அமைத்துக்கொண்டது. ஆனாலும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் மட்டும் நின்றுவிடாமல், கடந்த காலத்துடன் முழுமையாக
கணக்குத் தீர்ப்பதில் உள்நாட்டுத்துரோக சக்திகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் ஒரு
முடிவுகட்ட வேண்டும் என்பதில் தனது நாட்டைப் பொறுத்தவரையில் தீவிரமாக உள்ளார். இதன் பொருட்டு தனது
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதோடு மக்களை விழிப்புணர்வு இயக்கங்களுக்கும் உற்சாகப்படுத்துகிறார். இதன்
ஒட்டு மொத்த விளைவாக வெனிசுலாவில் 21 -ஆம் நூற்றாண்டு சோசலிஸம் என்பதே லட்சியம் என புரகடனம்
செய்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் சாவேஸ்.  


                                                                          
                                                                                                                                             -பதிப்பகத்தார்.