book

நில்... கவனி... அபாயம்!

Nil…Kavani…Abaayam!

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கட்டுரையாளர்கள்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :320
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788189780111
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், தகவல்கள், நுகர்வோர்
Add to Cart

சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.
தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.

ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.

'ஸ்பெஷல் ஸ்டோரி' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்' என்ற நோக்கமும் வெற்றி பெற்றது. இதற்கு, 'கட்டுரையில் உள்ள தகவல்கள் மூலம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்' என வாசகர்கள் கூறியதே சான்று.

பெற்றோர்கள், மாணவர்கள், நுகர்வோர், தொழில் புரிவோர், பல்வேறுத் துறைகளில் பணியாற்றுவோர் என அனைத்துத் தரப்பினரும் சமுதாய சீர்கேட்டுக்கு பலியாகாமல் விழிப்பு உணர்வுடன் செயல்பட இந்தப் புத்தகம் வழிவகை செய்கிறது. 'நில்... கவனி... அபாயம்!' என்ற தலைப்பில் சீரழிவுகளை அகற்றும் கருத்தாயுதங்களைத் தாங்கி வரும் இந்தக் கட்டுரைகளை, ஒவ்வொருவரும் படித்து, விழித்துக் கொள்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.