-
"தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் சக்தி தனக்கு உள்ளே தான் இருக்கிறது.தன்னை உயர்த்தும் போது, தானே தனக்கு நண்பனாகவும், தன்னை வீழ்த்திக் கொள்ளும் போது, தானே தனக்கு பகைவனாகவும் ஆகும் திருமூலரின் திருமந்திரத் தத்துவத்தை, வெளிநாட்டினர் விரிவாக, ""ஆளுமைத் திறன்களாக' எழுதி வருகின்றனர். டேவிட் ஷ்வார்ட்ஸ் என்பவர் எழுதிய, சுயமுன்னேற்ற நூலின், சுவையான தமிழாக்கம் இந்த நூல். உலகம் முழுவதும் லட்சக்கணக்காக விற்ற நூலிது. ஒரே மாதத்தில், இரண்டாம் பதிப்பாகத் தமிழில் வலம் வருவதே, இதைத் தமிழ் மக்கள் வரவேற்பதற்குச் சாட்சி ஆகும்.
வெற்றி என்பது நம்பிக்கையால், தனக் குள் விதையாகி, பிறகு வெளியே கனிவது. அவநம்பிக்கையால் தான் தோல்வி நோய் வருகிறது.
கவலையே வேண்டாம். உடல், தோற்றம், மனம், அணுகுமுறை இவைகளில் கவனம் செலுத்தி, நிமிர்ந்து நில்லுங்கள், நேர்முகமாகப் பேசுங்கள், செயல்படுவதில் புதியே வேகம் கொள் ளுங்கள், தோல்வியை மறந்து, புதிதாக எழுந்து நின்று முயன்று வெற்றி பெறுங் கள் என்ற பல வெற்றிச் சுவடிகளை இந்த நூல் காட்டுகிறது. பஞ்சரான டியூப்பை ஒட்டி, காற்றை ஏற்றுவது போல, தோல்வியால் துவண்டு சாய்ந்த மனங்கள், இந்த நூலைப் படித்தால், மீண்டும் நிமிர்ந்து ஓடிவெற்றிக் கோட்டை தொட்டு விடுவார்கள்."
-
This book Sinthanai Perithu Saanthanai Perithu is written by and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் சிந்தனை பெரிது சாதனை பெரிது, டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthanai Perithu Saanthanai Perithu, சிந்தனை பெரிது சாதனை பெரிது, டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Sinthanai Perithu Saanthanai Perithu tamil book.
|