book

ஞானத்தின் ரசவாதம்

Gnanathin Rasavatham

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788184021325
Add to Cart

நீ முதல் முறையாக மவுனமாகும்போது உனது பழைய அனுபத்திலிருந்து உணரக்கூடியதெல்லாம் துயரம்தான். அதை ஆழமாக அனுமதி கொடு. அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே. ஏனெனில் அந்த முடிவே ஒரு தடையாகிப் போகும். ‌எதையாவது ஒன்றை எதிர்மறை என்று கூறும்பொழுதே நீ அதை விலக்க முயற்சிக்கிறாய். அதைப்பற்றி எதிர்மறையாக எதுவும் கூறாதே. அதை மவுனத்திற்கும் பாடலுக்கும் இடையே உள்ள ஒரு பாலமாக ஏற்றுக்கொள். சற்றே பொறுத்திரு, அதன் பின்னர் நீ இந்த மவுனம் செத்துப்போனது அல்ல. இது கல்லறையின் மவுனம் அல்ல என்பதைப் புரிந்து ‌கொள்வாய். இந்த மவுனம் உயிர்த்துடிப்புள்ளது. இது வெறுமையான மவுனம் அல்ல. அதிகமாக நிறைந்த வழியும் மவுனம்... எதனால் நிறைந்து வழிகிறது? மீண்டும் ஒரு புதிய அனுபவம் உனக்காகக் காத்திருக்கிறது. நீ வார்த்தைகளுடன் கூடிய பாடல்களை மட்டுமே அறிந்திருக்கிறாய். வார்த்தைகளற்ற ஒரு பரிசுத்தமான பாடலை, ஓசையற்ற ஒரு இசையை நீ எப்போதுமே அறிந்ததில்லை. சற்றே பொறுத்திருந்தால் போதும், இந்த துயரம் வார்த்தைகளற்ற ஒரு பாடலாக, ஓசையற்ற இசையாக, அசைவுகளற்ற பாடலாக மாறத் தொடங்கும். எல்லாமே மிகச் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை.