book

பிள்ளைகளின் தோள்கள்

Pillaigalin Tholgal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பாண்டுங்கன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415648
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

பிள்ளைகளின் தோள்கள்;வீட்டு மனை என்ற கதை மக்களை நம்பவைத்து ஏமாற்றும் போலி
விளம்பர வித்தைக்கார்ர்கள் பற்றிச் சித்திரிக்கிறது. ஏமாந்த சோணகிரிகள் இருக்கும்வரை
ஏமாற்றுப் பேர்வழிகளின் விளம்பரங்கள் எட்டுத் திசைகளிலும் பாய்ந்து பரவிக்கொண்டுதான்
இருக்கும். இப்படிப்பட்ட ஏமாற்றுக்கார்ர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுகொண்டு
நடவடிக்கை  எடுக்கிறதா? இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பரிதவித்து மனு கொடுத்தால் தான்
பரிசீலனை செய்கிறது. இந்த நிலை மாறவேண்டும். மாற்றவேண்டும் என்பதற்கு இந்தக் கதை
எடுத்துக்காட்டு. எனக்குத் தெரிஞ்சு ஒரே சாதிதான். மனுஷ சாதி. செத்தவங்களை மனுஷனா
பாரு. சாதியைப் பார்க்காதே அப்படிப் பார்த்தால் நாளைக்கு வெட்டியான் எரிக்கமாட்டான்'
என்று சாதிப்பிரிவினைகளை ஒரு கதையில் சாடுகிறார் நூலாசிரியர்.வாழ்க்கை முழுவதும்
பல்லக்கு சுமந்து தழும்பேறிய தோள்களின் சுமை எங்கே தங்கள் பிள்ளைகளுக்கும் வந்துவிடுமோ
என்று பெற்றோர் பயந்தனர் என்ற  வரிகள்.பிள்ளைகளின் தோள்கள் புது உலகத்தைத் தூக்கி
நிறுத்தவேண்டும் என்ற இதயத்துடிப்பின் அதிர்வுகளாக வெளிப்படுகின்றன.எல்லாத் கதைகளுமே
அலுப்பு, சலிப்பில்லாமல் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டுவதுடன் ஒவ்வொரு கதைக்கருவும்
உள்ளத்தில் கருக்கொண்டு நாட்டைப்பிடித்த கேடுகளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைத்
தூண்டும்.

                                          -பதிப்பகத்தார்.