தென்னாட்டுப் போர்க்களங்கள்
Thennadu Porkalangal
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரை
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :512
பதிப்பு :2
Published on :2011
Add to Cartபோர்களும் அரசர் ஆட்சிகளும், வெளிநாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்கமடைந்து வருகின்றன. ஆனால் நம் தமிழகத்தின் நிலை இவ்வகையில் தலைகீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில் வேறெந்த இனத்துக்கும் கிட்டாத ஒன்று. அது உலக வரலாற்றுக்கே ஒரு புதுத் திசை திருப்பியுதவ வல்லது. சங்க இலக்கியம் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் அரசியல், சமய, சமுதாய, பொருளியல் வாழ்வை நாம் அறிவதுபோல், உலகில் வேறெந்த நாட்டவரும் எந்த மொழி, இலக்கியம் மூலமாகவும், எந்தக் காலத்துக்கும் முழு வரலாற்றோவியம் காண முடியாது. இதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதிலேயே தமிழர் நெடுநாள் சொக்கியிருந்துவிட்டனர் எனலாம். புலமை சான்ற வரலாற்றாசிரியர் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகம் பற்றி அணி அணியாக எழுதினர். நுணுக்க விரிவாக எழுதினர். ஆனால் அதன் பிற்பட்ட 1800 ஆண்டு வரலாற்றுக்கு அதுபோன்ற இலக்கியம் இல்லை. அதுபோன்ற வரலாறு நீண்ட நாள் எழுத முடியாது. இது உலக வரலாற்றிலே ஒரு புதிர்- உலக வரலாற்றுக்கே ஒரு புதிர் ஆகும்.கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழகத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிரம் ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல நிறையுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல. ஆனால் அது உலக வரலாறு தொடங்கிய இடத்தில் தொடங்கிற்று- ஆண்டு, நாட்டுப் பெயர், இடம், மன்னர் பெயர் முதலியன அதில் உண்டு. போர் உண்டு, மன்னர் பெயர் வரிசை, செயல் வரிசை உண்டு. இதுவே உண்மை வரலாறு என்று கொண்டவர்- சிறப்பாக மாணவர் பலர்.