சமீப காலத்தில்தான் புதுமைத் தமிழ் நம்மிடையே பிறந்துள்ளது. இதுவரையில் சிறுகதையில் தவழ்ந்த புதுமை இலக்கியம் இப்போதுதான் நாவல் நடை போடுகிறது. அந்தச் சின்னஞ்சிறு செல்லக் குழந்தைக்கு இந்தக் காதற் கதையை ஒரு அன்பு மலராகச் சூட்ட விரும்புகிறேன். இந்தக்கதையில் வரும் முக்கியமான பாத்திரங்கள் நினைத்துப் பார்க்கத் தெரியாத மக்களின் நிந்தனைக்குள்ளானவர்கள்; படிப்பும் பண்பும் அறியாதவர்களால் பரிகசிக்கப்பட்டவர்கள்; மனித இருதயம் படைக்காதவர்களால் மதிக்கப்படாத மனிதர்கள்.