இன்னொரு உலகம்
Innoru Ulagam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா முகுந்தன்
பதிப்பகம் :செங்கைப் பதிப்பகம்
Publisher :Sengai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2004
Add to Cartஅவள் மனம் முழுவதும் ஒரே கேள்விதான். இன்றைக்கு என்ன நாள்? இங்கே வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? எத்தனையோ வருடங்களாக இங்கே இருப்பது போல் தோன்றுகிறதே. முகம் முழுவதும் சோபை இழந்து, சுருங் கிப் போய், மொத்தத்தில் இருட்டுப் பொந்தில் பிடிக்கப் பட்ட சதாம் உசேனைப் போல் ரொம்பப் பாவமாக இருந்தாள். போன வருடம் இதே நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். வீட்டில் அல்லி தர்பார்தான். போன முறை வீட்டில் உள்ளவர்களை, முக்கியமாக மருமகளைச் சாடு சாடு என்று சாடி, பிள்ளையிலிருந்து எல்லோரும் வாய் மூடி மௌனமாக நின்றது ஞாபகத்திற்கு வந்தது. பெருமூச்சு விடுகிறாள். இந்த வாய்... இந்த வாயினால் தானே தனக்கு இந்த நிலை. இந்த நாக்கு எத்தனை பேரைச் சுட்டிருக்கிறது. அடுத்தவருக்கும் இதயம் இருக்கிறது என்று என்றாவது நினைத்திருக்குமா? கண்கள் ரொம்பிப் போக, நீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த நினைவுகள் இங்கே வந்ததிலிருந்து எத்தனை முறை ஏற்பட்டிருக்கிறது. நினைத்து நினைத்துக் கண்ணீர் விடாத நாளே இல்லை என்று சொல்லலாம்.