book

துணையோடு வா…

Thunaiyodu Vaa..

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் பி.டி.சாமி
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Tamilan Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

எல்லா முகங்களும் களிப்பில் மலர்ந்திருந்தன. சிநேக ஆசிரியை அம்சாவுக்கு வந்திருக்கும் திடீர் குபேர வாழ்வு ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் பெருமையாகவே கருதியிருந்தார்கள். யாருக்குமே அவளுடைய வாழ்க்கையில் எந்தவிதமான பொறாமை உணர்வுகளும் இல்லை. அசடு வழிய அம்சா முகம் மலர்ந்து வெட்கமாகச் சிரித்துவிட்டு, "எனக்குக் கல்யாணமாகப் போறதுதான்' என்று தலை தாழ்த்தினாள். ஹேப்பி... வனஜா "கன்கிராஜ்ட்ஸ்... ரீயலி வி ஆர் ஹேப்பி ... டீச்சர் சந்தோஷமாக அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ந்தாள். எல்லா ஆசிரியைகளுமே இன்னும் கல்யாணமாகாமல் மணமாலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்கள் தான்! எல்லாருமே இளம் வயதுக்காரர்கள்தான்! அம்சா பெயரைப் போலவே சகல உறுப்புக்களிலுமே படு அம்சம்! எப்போதுமே பளீரென்ற சிரித்த முகம்! மூக்கு கண்கள், உதடு என்று ஒவ்வொரு பகுதிகளுமே முதல் ரகம். எடுப்பான உடலழகு சினிமா படம் எடுப்பவர்களைச் சுண்டி இழுத்துவிடும். அப்படியொரு நிலை ஏற்பட்டிருந்தால் அம்சா இன்றைய தினம் சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையாகவோ, சத்துணவு போடும் பணியாளராகவோ இருந்திருக்க மாட்டாள். சினிமா படங்களிலும், தொலைக்காட்சி சின்னத்திரை களிலும் கதாநாயகியாக நடத்தி பெரும் புகழோடு பணத் தையம் அள்ளியிருப்பாள்