தெய்வத்துள் தெய்வம்
Deivathin Deivam
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் பி.டி.சாமி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2004
Add to Cartதெய்வத்துள் தெய்வம் - அன்று எழுச்சி நிறைந்த மே தின விழாக் கொண்டாட்டம்! தொழிலாளர்களுக்கு அன்று மடங்கு பல மகிழ்ச்சி! காரணம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்: அதோடு போனசும் கணிசமாக தரப்பட்டுள்ளது. 'தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் உற்சாகமான விழாக் கொண்டாட்டம்தான். அன்று காலையில் சூரியன் உதயமாகி பளீரென்ற வெளிச்சத்தைத் தெளிவாக எங்கும் பரவ விட்டிருந்தது. சுவரிலுள்ள வட்ட வடிவ கடிகாரம் மணி எட்டு என்பதை எடுத்துக் காட்டியது. அது, சென்னை மாநகரில் இந்திரா நகரில் ஏராளமான நிலப்பரப்பில் அமைந்துள்ள 'ராணி பாரடைஸ்' எனும் நவீன தொழில் கூடம் அதன் முன்னாலுள்ள காசி மைதானத்தில்தான் சாமியானா பந்தல் போடப்பட்டு மங்கல வாத்தியங்கள் இப்போது 'பாம்.. பூம்' என்று முழங்கிக் கொண்டிருந்தன. எங்கும் வண்ண வண்ண தோரணங்கள்.