விடியலைத் தேடும் பூபாளம்
Vidiyalaith Theadum Poobalam
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :16
Published on :2011
Out of StockAdd to Alert List
இரவில் வெகுநேரம் சுமித்ரா அழுதுகொண்டே
இருந்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “தூங்கம்மா”என்றாள்
ஸ்ரீமதி.இரவில் ஸ்ரீமதியின் வலப்பக்கம் சுமித்திரையின்
உடைமை.அடுத்தடுத்துப் பிறந்த அவளது சொந்தக் குழந்தைகள் தான் விலகிச்
சென்றனவே தவிர, சுமியின் உரிமைக்குப் பங்கம் நேர்ந்ததில்லை. இன்றும் அதே
வழக்கமாகப் படுத்தவள் அழுது கொண்டிருக்கவே, தாய் மனம் தாளாமல், சமாதானம்
செய்ய முன் வந்து, “அசடு! இன்னமுமா அழுவது! தூங்கு தூங்கு”என்று மகள்
முதுகில் தட்டிக் கொடுத்தாள் ஸ்ரீமதி.“அம்மா”என்று சலுகையோடு அதிகமாக
அழுதாள் புத்திரி.“உஸ்... இப்படி அழுதால் உடம்பு எதற்காகும்? பேசாமல்
தூங்கு,”என்று சமாதானமாகப் பேசினாள் ஸ்ரீமதி.