book

காதல் சொன்ன கணமே...

Kaadhal Sonna Kanamae..

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

"சமையல் ஆகி விட்டது. பாரதியை எடுத்து வைக்கச் சொன்னேன், பாருங்க. ரெண்டே நிமிஷத்தில் வந்து விடுகிறேன்!'' என்று கற்பூர ஆரத்தி காட்ட ஆரம்பித்தார் ராஜி. "பாரதி..." என்று அழைத்தபடி உள்ளே செல்லும் ராகவன், தஞ்சாவூரில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலையில் பணி புரிந்து வருகிறார். ஆசைக்கு ஒரு பெண் பாரதி. தஞ்சாவூரில் பி.ஈ. நான்காம் ஆண்டு படித்து வருகிறாள். துடிப்பான பெண். குடும்பத்தில் ஒட்டுதல் அதிகம். ஆஸ்திக்கு ஒரு ஆண், தமிழ்ச் செல்வன். இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதப் போகும் புத்திசாலி மாணவன். ஒரு நாளைக்கு நூறு சண்டை இருவருக்கும் வந்து போகும். ஆனாலும் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத கவிதை. "ஹேய் பாக்ஸ், நேற்று காலேஜிற்கு, கேம்பஸ் இண்டர்வியூவிற்கு வந்தாங்க என்று சொன்னாயே? ஏதாவது தேறுமா?" என்று கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டி, அவளை வம்பிழுத்தான் தமிழ். “என்னோட பேரை இப்படிக் கொலை பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது? உனக்குப் போய்த் தமிழ்ச்செல்வன் என்று பேர் வச்சாரு பாரு, அவரைச் சொல்லணும். எழுந் திரி, பிளாஸ்டிக் பக்கெட் உன்னோட நூறு கிலோ எடை யைத் தாங்குமா?" என்று எரிச்சலோடு எழுப்பினாள். ''அம்மாவும் அப்பாவும் உன்னை அக்கா என்று கூப்பிட வேண்டும் என்று அனத்திக் கொண்டே இருக்காங்க.