book

பொன்னியின் செல்வன் - பாகம் 2

Ponniyen Selvan - Part II

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :492
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184936841
குறிச்சொற்கள் :Ponniyen Selvan
Add to Cart

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வன்’ 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. 1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார். கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன."