எங்கே எது தவறாகிப் போனது?
Engae Edhu Thavaragip Ponathu?
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: மலர்கொடி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :207
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788184024852
Add to Cartஇந்த நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது?'' என்ற புகழ் பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னார்டின் துக்ளக் நாடகத்தின் தொடக்க வரிகள் நம்மைத் துன் புறுத்த மீண்டும் வந்துள்ளன. பேரதிர்ச்சியை அளித்த லங்கேஷ் கவுரியின் கொலையைத் தொடர்ந்து காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 25 கன்னட எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களில் கர்னார்டும் ஒருவர். சுயசிந்தனையாளர்கள் எல்லாம் இப்போது ஆபத்தில் உள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு கேலியான குரலில் பேசிக்கொண்டிருக்கும், மண்டையில் மூளைக்கு பதில் வைக்கோல் நிரப்பப்பட்டிருக்கும் மத புனிதர்களுக்கான காலம் இது. நமக்கு நாமே சுயமாக சிந்தனை செய்யக்கூடாது; பேசக்கூடாது. வாய்மூடி அமைதியாக இருக்கும் அடிமைகளுக்கான காலமிது.
இல்லாவிட்டால், எழுத்தாளர்களுக்கு எதற்கு காவல்துறை பாதுகாப்பு? பாரம்பரியமாகவே எழுத் தாளர்களை,கலைஞர்களை,ஆசிரியர்களை,சிந்தனை யாளர்களை மதிக்கும் ஒரு சமூகத்தாலும், வாசகர் களாலும் எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள் ளனர். ஆனால், இப்போது சில ஆண்டு காலமாக, தங்களுக்கு சங்கடம் அளிக்கும் சிந்தனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனப்பான்மை வளர்ந்து வருகிறது. கருத்து வேறுபடுபவர்களைக் கொலை செய்வது என்ற கேவலமான நிலைக்கு இந்த சகிப்புத் தன்மையின்மை வளருவதற்கு நாம் அனுமதித்து வந்துள்ளோம். நூல்களைத் தடை செய்வதில் இருந்து, நூலகங்களை அடித்து நொறுக்கி நூல்களைத் தீயிட்டு எரிப்பது வரை, நுண்கலைக் கலைஞர்களைத் தாக்கி வேட்டையாடுவதுமுதல் புகழ்பெற்றஓவியர் எம்.எப். ஹூசைனை நாட்டை விட்டு வெளியே துரத்தியது வரை, எனது நாட்டைப் பற்றிய எனது கருத்தை ஏற்றுக் கொள்ளாத எவரையும் துணிவுடன் வெளிப்படையாகத் துன்புறுத்துவது என்பதே இன்றைய வாடிக்கை ஆகிவிட்டது.