book

காசு மேல காசு

Kasu mela kasu

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகப்பன் - புகழேந்தி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பங்குச்சந்தை
பக்கங்கள் :251
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788189780166
குறிச்சொற்கள் :பணம், விஷயங்கள், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

ஒருவரிடம் பணம் அதிகமாக இருந்தால் அது சொன்னபடிதான் அவர் நடக்கவேண்டியிருக்கும் என்று தத்துவார்த்தமாக சொல்வது உண்டு. ஆனால், எவ்வளவு பணம் இருந்தாலும் நீங்கள் சொன்னபடி அதைக் கேட்க வைப்பதுதான் தனிக் கலை.
கையிலிருப்பது ஒரு ரூபாயோ, நூறு ரூபாயோ அல்லது லட்ச ரூபாயோ கண்ணை மூடிக்கொண்டு செலவழிப்பது சுலபம். ஆனால், அதைப் பெருக்குவது...? அதுவும் சுலபம்தான். அதைத்தான் இந்தக் கட்டுரைகளில் 'நாணயம் விகடன்' புகழ் நாகப்பன்_புகழேந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பிஸினஸ் பற்றிய கட்டுரைகளை ஜூனியர் விகடனில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது, அரசியல், சினிமா, ஆன்மிகம் என்று போய்க் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதெல்லாம் எடுபடுமா... என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.

வாழ்க்கைக்குத் தேவையான எதை எழுதினாலும் வாசிக்கத் தயாராக இருப்பவர்கள்தான் ஜூ.வி. வாசகர்கள் என்ற நம்பிக்கையோடு அதைத் தொடங்கினோம். தமிழ் வாசகர்களுக்குப் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகளுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது.

"பர்சனல் ஃபைனான்ஸ்' எனப்படும் தனி நபர் வருவாய்க்கான வழிகளைப் பற்றி அவர்கள் எழுதியதைப் படித்த வாசகர்கள் பலரும் இன்றைக்குத் தரமான முதலீட்டுத் திட்டங்களில் தங்களின் பணத்தைப் போட்டுவிட்டு கவலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது உண்மை!

அதே போல, நாகரிக உலகில் புதிது புதிதாக வடிவெடுக்கும் வர்த்தக, பொருளாதார விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் சென்று சேரும்வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைகள்... வாசகர்களை பல துறைகளிலும் விசாலமான அறிவு பெறத் தூண்டியிருக்கிறது.

இந்தப் புத்தகத்துக்கும் தங்களின் பேராதரவு இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை!