உடையும் இந்தியா?
Udaiyum India?
₹850
எழுத்தாளர் :அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :768
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184933109
Add to Cart "இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்.
இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் பங்கைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ஆரிய-திராவிட இனங்கள் என்ற புரட்டு எந்த நூற்றாண்டில், யாரால் உருவாக்கப்பட்டது, ஆஃப்ரோ-தலித் கருத்தாக்கம் யாரால், எப்போது முன்வைக்கப்பட்டது, எப்படி இந்த அடையாள அரசியனானது இந்தியர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்பதை முழுமையாக இந்நூலில் அலசுகிறார்கள் ஆசிரியர்கள். ---- கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், நேபாளம் போன்ற நாடுகள் வழியாக சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிச, மார்க்சிய அடிப்படைவாதம், மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களை தனித்து பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்… ஆகியவற்றில் கடைசியாக சொல்லப்பட்டதை, மிகவும் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவை இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட தலித் சமூகங்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று, தெளிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். கனமான புத்தகம், கனமான விஷயம். ஒவ்வொரு அத்தியாயமும் மெல்ல உள்வாங்கிக் கொண்டு படிக்க வேண்டும். புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பாக ஆரியர் மூக்கு, திராவிட மூக்கு என்கிற கோட்பாடு அலசப்படும் விதம், மொழி அடையாளத்தை இன அடையாளமாக திரித்த கால்டுவெல்லின் தந்திரம் ஆகியவை மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியவை. ஆவன செய்யக்கூடிய இடங்களில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளும் நேர்மையான அரசியல்வாதிகளும் ஏன், எல்லாருமே அவசியம் படித்து, சிந்திக்க வேண்டிய நூல். எளிமையான தெளிவான மொழிபெயர்ப்பு. -சிவா."